September 17, 2026

கீழக்கரையில் பொதுமக்கள் கூட்டமைப்பு அலுவலகம் திறப்பு விழா

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அரசு தாலுகா மருத்துவமனை முன்பாக கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பின் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது .

விழாவில் ஜமாஅத் நிர்வாகிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

குடிநீர், மின்சாரம், சாலை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான பொதுமக்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு அரசு துறைகள் மூலம் உரிய தீர்வு கிடைக்கச் செய்வதற்காகவும், மக்கள் நலப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்காகவும் இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Spread the love