August 13, 2026

சுப்ரியா சுலே மகள் திருமண வரவேற்பு மேடையில் காங். தலைவர்களுடன் உற்சாகமாக பேசிய பிரதமர் மோடி

புதுடெல்லி: திருமண வரவேற்பு மேடை​யில் காங்கிரஸ் மூத்த தலை​வர்​களு​டன் பிரதமர் நரேந்​திர மோடி உற்​சாக​மாக பேசிய வீடியோக்​கள் இணை​யத்​தில் வைரலாகி வரு​கின்​றன.

தேசி​ய​வாத காங்​கிரஸ் (சரத் பவார்) எம்​.பி.​யும், மகா​ராஷ்டிர முன்னாள் முதல்​வர் சரத் பவாரின் மகளு​மான சுப்​ரியா சுலே​வின் மகள் ரேவதி சுலே-​நாக்​பூர் தொழில​திபர் சாரங் லகானி திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்​லி​யில் கடந்த திங்​கள்​கிழமை நடைபெற்றது.

இதில் கட்சி வேறு​பாடின்றி அரசி​யல் தலை​வர்​கள் கலந்​து​கொண்டு மணமக்​களை வாழ்த்​தினர். இந்​நிகழ்ச்​சி​யில் முத்தாய்ப்​பாக பிரதமர் நரேந்​திர மோடி கலந்​து​கொண்டு மணமக்​களை வாழ்த்​தி​னார். அப்​போது திருமண மேடை​யில் நின்று கொண்​டிருந்த காங்​கிரஸ் மூத்த தலை​வர்​கள் ராகுல் காந்தி, பிரி​யங்கா காந்​தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோ​ருடன் பிரதமர் மோடி உற்​சாக​மாக பேசி​னார்.

நாடாளு​மன்​றக் கூட்​டத்​தின்​போது ஆளுங்​கட்​சி-எ​திர்க்​கட்சி எம்.பி.க்​கள் சூடான விவாதத்​தில் ஈடு​படும் நிலை​யில், அவைக்கு வெளியே திருமண நிகழ்ச்​சி​யில் மகிழ்ச்​சி​யுடன் பேசுவது அரசியல் நாகரி​கத்​துக்கு எடுத்​துக்​காட்​டாக அமைந்​துள்​ளது.

திருமண வரவேற்​பின்​போது மேடை​யில் நின்​றிருந்த பிரி​யங்கா காந்​தி​யைப் பார்த்த பிரதமர் மோடி, “பிரி​யங்​கா, நீங்​கள் எப்​படி இருக்​கிறீர்​கள்?” என்​றார். அதற்கு பிரி​யங்​கா, “நான் நலமாக இருக்கிறேன். நீங்​கள் நலமாக இருக்​கிறீர்​களா?” என்று கேட்​டார். அதற்கு பிரதமர் மோடி, “நான் அப்​படியே​தான் இருக்​கிறேன்” என்றார்.

அப்​போது அரு​கில் நின்று கொண்​டிருந்த காங்​கிரஸ் தேசி​யத் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே், “நீங்​கள் அப்​படியே இல்​லை. சிறிது மாறி இருக்​கிறீர்​கள்” என்​றார். அதற்கு அப்​படி​யா.. என்று மகிழ்ச்​சி​யுடன் பதில் அளித்​தார் பிரதமர் மோடி.

பின்​னர் கார்​கே​வின் தோள்​களில் கையைப் போட்​டுக் கொண்டு கையொலி எழுப்பி உற்​சாகப்​படுத்​தி​னார் பிரதமர் மோடி. இதைப் பார்த்​துக் கொண்​டிருந்த ராகுல் காந்​தி​யும் சிரித்​த​வாறே அவர்​களு​டன் பேசிக் கொண்​டிருந்​தார். இந்த வீடியோக்​கள் சமூக வலை​தளங்களில்​ வெளி​யாகி வரவேற்​பைப்​ பெற்​று வருகின்​றன.

Spread the love