சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,09,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொருளாதார நிலைமைகள், அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றம், வட்டி விகித ஏற்றத்தாழ்வுகள், புவியியல் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
அதாவது நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதுவும் வாரத்தின் தொடக்க நாளான நேற்று தங்கம் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.1,09,400க்கு விற்பனையானது. தங்கம் விலை கிராம் ரூ.13,675க்கு விற்பனையானது.சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245க்கு விற்றது.
இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,09,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.13,660க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.245க்கு விற்பனை செய்யப்படுகிறது.

More Stories
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.1,09,400க்கு விற்பனை!!
சூரியசக்தி மின் நிலையம் அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம்: 10 நாட்களில் 16,500 பேர் விண்ணப்பம்!
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,09,400க்கு விற்பனை!!