சோழவந்தான் மார்ச் 11
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி கிராமத்தில் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்யும் ஜெயபாண்டி தனது வீட்டில் மின்சார சுவிட்சை ஆன் செய்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் இவருக்கு 12 ஆம் வகுப்பு படிக்கும் மனோஜ் என்ற மகனும் பத்தாம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர்
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு ஜெயபாண்டியன் மனைவி உயிரிழந்த நிலையில் மின்சாரம் தாக்கி ஜெயபாண்டியும் உயிரிழந்ததால் அவரின் இரண்டு குழந்தைகள் ஆதரவின்றி தவிக்கும் நிலைக்கு ஆளாகினர்
மேலும் தற்போது பன்னிரெண்டாம் வகுப்புக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையிலும் இன்று புதன்கிழமை பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு துவங்க உள்ள நிலையில் ஜெயபாண்டியின் இரு குழந்தைகளும் அரசு பொதுத்தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் அடுத்தடுத்து தாயும் தந்தையும் உயிரிழந்ததால் கடும் மன அழுத்தத்திற்கும் பொருளாதார நெருக்கடிக்கும் உயர்கல்வி படிக்கக் கூடிய வாய்ப்பை இழக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டனர்
பத்திரிகைகளில் வெளிவந்த நிலையில் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ சென்று ஜெயபாண்டியின் குழந்தைகளை நேரில் பார்த்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார் மேலும் குழந்தைகள் இருவரின் உயர் கல்வி படிப்புக்கு உதவி செய்வதாக உறுதி அளித்ததுடன் எதிர்காலத்தில் அவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர தமிழக முதல்வரை சந்தித்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்
இதுகுறித்து ஜெயபாண்டியனின் உறவினர்கள் கூறுகையில் தாய், தந்தையரை இழந்து ஆதரவின்றி தவித்த நிலையில் இந்த தகவலை பத்திரிக்கை மூலம் மக்கள் பிரதிநிதியின் கவனத்திற்கு கொண்டு சென்று நிவாரணம் கிடைக்க உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினர்

More Stories
பெரம்பலூர், மே.5-
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. தவெக நிர்வாகி கைது.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!
இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி