தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு தேசிய ஜனநாயகனின் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி நாகர்கோவில் ரோடு ஷோ நடத்த உள்ளார் இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
பிதமர் மோடி தமிழகம் வருகை
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரித்து. வருகிறது அந்த வகையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு நடைபெற ஓராண்டுக்கு முன்பாகவே பாஜக மீண்டும் அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்தது.
தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்று சர்ச்சை பிடித்தது பின்னர் பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனை தொடர்ந்து அதிமுக தலைமையில் அங்க வகிக்கும் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக 10 முறை வென்ற தொகுதி…இந்த முறை யாருக்கு?
தேசிய ஜனநாயகக் கூட்டணி வாக்கு சேகரிப்பு
குறிப்பாக பாஜக 60க்கும் மேற்பட்ட இடங்கள் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில், அதிமுக பாஜகவுக்கு ஒதுக்கிய தொகுதிகளில் சில அதிமுகவின் பல பொருந்திய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை பாஜக பயன்படுத்திக் கொண்டு அந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், தேர்தல் காலங்களில் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு அதிக முறை வருகை தருவது என்று ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு பின்பு இரண்டு முறை மட்டுமே வருகை தந்தார். அதன் பிறகு அவர் வருகை தரவில்லை. இது குறித்து அரசியல் வட்டாரத்தில் கேட்டபோது அசாம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் முன்னதாகவே நடைபெற்றது.
அதற்காக இரண்டு மாவட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தர முடியாது சூழல் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் நாளுக்கு நாள் தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார்.
நாகர்கோவில் ரோட் ஷோ
இதற்கான பயன அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது அதன்படி இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 4.10 மணிக்கு நான் திருக்கோவில் பிரதமர் மோடி வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் நாகர்கோவிலில் தரையிறங்கியதும் 4.15 மணிக்கு ஹெலிகாப்டரில் இருந்து காரில் வெப்ப மூடு சந்திப்பிலிருந்து வடசேரி வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோடு ஷோ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் போது கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பொதுமக்களிடம் பிரதமர் மோடி வாக்கு சேகரிப்பார் ரோடு சோ நிறைவடைந்த பிறகு மாலை 5.45 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் திரும்புகிறார் அங்கிருந்து மாலை 6.20 மணிக்கு டெல்லி நோக்கி அவர் புறப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
ரயில் பயணிக்களுக்கு முக்கிய அறிவிப்பு ..சென்னை- அரக்கோணம் மின்சார ரயில் வழித்தடத்தில் மாற்றம்- முழு விவரம்!
சத்தீஸ்கரில் பாய்லர் வெடித்து 10 பேர் உயிரிழப்பு: 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
மேற்கு வங்கத்தில் மீன் உற்பத்தியில் அலட்சியம்: மம்தா அரசு மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு