அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து தவறாக வழிநடத்துவதாக ராகுல் காந்தி மீது மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றச்சாட்டு

ராகுல் காந்தி கோப்புப் படம்
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து தவறாக வழிநடத்துவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
தில்லியில் செய்தியாளர்களுடன் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசுகையில், “இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து ராகுலுக்கு எதுவும் தெரியாது. அவர் நாட்டைத் தவறாக வழிநடத்துகிறார்.
நாட்டில் அமைதியின்மையைத் தூண்டவே அவர் முயற்சிக்கிறார். நாட்டில் உள்நாட்டுப் போரை விரும்பும் ராகுல் மீது வழக்கு தொடரப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் மூலம் அமெரிக்க அதிபா் டிரப்ம்பிடம் பிரதமா் மோடி சரணடைந்துவிட்டதாக ராகுல் காந்தி தொடா்ந்து விமா்சனம் செய்து வரும்நிலையில், ராகுல் மீது வழக்கு தொடர வேண்டும் என்று கிரிராஜ் சிங் வலியுறுத்தியுள்ளார்.

More Stories
‘நாங்கள் ஏழையாக வாழ வேண்டுமா?’ – பிஹார் எம்எல்ஏ மைதிலிக்கு ஆதரவாக கங்கனா கேள்வி
திருப்பதி பிரம்மோற்சவ விழா சர்வ தரிசனத்துக்கு 8 கி.மீ. தூரம் நடக்க வேண்டுமா? – பக்தர்கள் அதிருப்தி
‘பிரதமர், அவரது தாய் குறித்த பேச்சு தரக்குறைவானது’ – ராகுல் காந்திக்கு பாஜக மூத்த தலைவர்கள் கண்டனம்