மே 21
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த ஆண்டிபாளையம் பகுதியில் சேர்ந்தவர் நாச்சிமுத்து இவரது மனைவி அன்னபூரணி இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அன்னபூரணி அதே பகுதியில் செயல்பட்டு வரும் பாலி பேக்கிங் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஜனவரி மாதம் பணியில் இருந்த போது இயந்திரத்தில் சிக்கி இவரது வலது கை துண்டானது. இதன் காரணமாக பெரும் சிரமத்தில் தவித்து வந்த அன்னபூரணி, கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆண்டிபாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த மத்திய மாவட்ட கழக செயலாளர் திமுக கழக வேட்பாளர் செல்வராஜிடம் தனது நிலையை எடுத்துக் கூறி தனக்கு உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதற்கு தேர்தல் முடிந்த பின்பு நிச்சயம் செய்வதாக செல்வராஜ் அன்னபூரணிக்கு வாக்குறுதி அளித்தார். இந்த நிலையில் தேர்தலில் செல்வராஜ் தோல்வியுற்றிருந்தாலும், தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தனது சொந்த செலவில் சுமார் 2 லட்சம் மதிப்புள்ள செயற்கை கை தயாரிக்கப்பட்டு இன்று திருப்பூர் சோலாபுரி அம்மன் கோவிலில் அன்னபூரணிக்கு அந்த கையானது பொருத்தப்பட்டது.

More Stories
நாமக்கல் மாவட்டம்
இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துக் கொண்டபோது முன்னாள் திருப்பூர் மேயர் திருமதி .விசாலாட்சி அவர்களும் உடனிருந்தார்
உரங்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்: வீரபாண்டியன் வலியுறுத்தல்