திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக, தொட்டிபாளையம் பகுதி கழகத்திற்கு உட்பட்ட 6-வது வார்டு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு தொட்டிபாளையம் பகுதி செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான விஜயகுமார் தலைமை தாங்கினார். இதில் திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வேல்குமார் சாமிநாதன் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.அப்போது, பகுதி கழக நிர்வாகிகள் தங்களது பணிகளை எவ்வாறு மேற்கொள்வது, வரும் உள்ளாட்சித் தேர்தலில் கட்சியின் வெற்றிக்காக ஒருங்கிணைந்து செயல்படுவது, தேர்தல் பணிகளைத் திட்டமிட்டு முன்னெடுப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் காட்டன் சித்ரா, நெசவாளர் அணி மாவட்டச் செயலாளர் ஜெகநாதன், முன்னாள் கவுன்சிலர் சபரிஸ்வரன், 6-வது வார்டு செயலாளர்கள் ராஜேஸ்குமார், கண்ணன், பண்ணாரி, மாவட்டப் பிரதிநிதி ஜெயக்குமார், மாணவர் அணி பகுதி துணைத் தலைவர் வைத்தீஸ்வரன், பகுதி இளைஞரணி தலைவர் சந்தோஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.மேலும், இளைஞரணி நிர்வாகிகள் விக்கி, ஸ்ரீராம், நாகூர் மீரான், சபரி, பிரேம், விஜய், எம்.ஜி.ஆர். காலனி ஜெகநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

More Stories
திருப்பூர் குன்னத்தூரில் கவன ஈர்ப்பு பேரணி
29-10-2026
ஒட்டன்சத்திரத்தில் முன் அறிவிப்பின்றி மின்தடை: பொதுமக்கள் அவதி!