
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கல்லாங்குளம் பகுதியில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோவிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ அகோரமூர்த்தி கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையொட்டி சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டு, பைரவருக்கு புனுகு சாற்றப்பட்டது. தொடர்ந்து பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து, கால பைரவர் சிறப்பு அலங்காரத்தில், எட்டு தீபந்தங்களுக்கு நடுவே மயானத்தை நேருக்கு நேர் பார்த்தவாறு, சிரித்த முகத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தமிழகத்திலேயே மயானத்தை நேருக்கு நேர் பார்த்தவாறு காட்சி தரும் சிறப்புமிக்க கால பைரவர் திருத்தலம் இதுவாகும் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சிறப்பு பூஜையில் ராசிபுரம், புதுப்பாளையம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

More Stories
வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை கண்டித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் பல்வேறு அமைப்பினர் ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து சொன்ன முதல்வர் விஜய்க்கு பாராட்டு கோயில்களில் செல்போனுக்கு ₹5 கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் திருப்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடந்த கிருஷ்ண ஜெயந்திவிழாவில் அர்ஜுன் சம்பத் பேட்டி,,,
திண்டுக்கல் மாவட்டம்