பழனி ஜூலை 2
பழனி முருகன் கோவிலின் உபகோவில் பெரியாவுடையார் சிவன் கோயில் ஆகும். இங்கு உலக நன்மைக்காக அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக லிங்க வடிவில் வீற்றிருக்கும் பெரியாவுடையார் சிவபெருமானுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்பு அன்னத்தால் அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டது. பின்பு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி மாரிமுத்து செய்திருந்தார். பெரியாவுடையாருக்கு அன்னாபிஷேகம், சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் ஸ்ரீ கந்த விலாஸ் குடும்பத்தார் சார்பாக நடைபெற்றது. உபயதாரர்கள் பழனி ஸ்ரீ கந்த விலாஸ் நிறுவனம் உரிமையாளர்கள் என் செல்வகுமார், எஸ் பிரேமா செல்வகுமார், எஸ் நவீன் விஷ்ணு, எஸ் நரேஷ்குமரன், ஆகியோர். இந்நிகழ்ச்சியில் சுகிதா மெட்டல் மார்ட் உரிமையாளர் சுகுமாரன், பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வ சுப்பிரமணியம், பில்டிங் காண்ட்ராக்டர் நேரு, பெரியநாயகி கல்வி அறக்கட்டளை சுந்தரம், முன்னாள் கோவில் சூப்பிரண்டு சந்திரசேகர், நெய்க்காரப்பட்டி முருகேசன், பொம்ம கடை மணி, தமிழக வேளாளர் பேரவை நிர்வாகிகள் சிவசுப்பிரமணியன், பாலமுருகன், ராஜாமணி, ராமநாத கிருஷ்ணன், துரைசாமி, குமரேசன், மதுரை வீரன், மற்றும் சோலை தேவர் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதான விருந்து வழங்கப்பட்டது

More Stories
ஒட்டன்சத்திரம் – பெரியகோட்டை கிராமத்தில் விவசாய நிலத்தில் தார்சாலை பணி முதல்வர் ச.ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ஒட்டன்சத்திரத்தில் தேசிய மருத்துவர்கள் தினம் – பரிசளிப்பு விழா
பாளையக்காட்டில் தார் சாலை அமைக்கும் பணி துவக்க விழா