October 4, 2026

பழனியில் காங்கிரஸ் கட்சியினர். காந்தி மற்றும் காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.

 பழனி அக்டோபர் 3 

பழனியில் மகாத்மா காந்தியின் பிறந்தநாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜ் நினைவு நாளை முன்னிட்டு,  இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக, இரு தலைவர்களின் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மலர் தூவி  மரியாதை செய்தனர். இந்நிகழ்ச்சியில் சொத்து பாதுகாப்பு குழு சுந்தர் தலைமையில், இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாலகுமார் முன்னிலையில், காமராஜர் தேசிய பேரவை பாப்புசாமி காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் கணபதி அவர்கள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் வ உ சி சேவாதளம் என் சுந்தரம் பிள்ளை,  ஆர் எப் பீட்டர், தேவேந்திரன், பாலசமுத்திரம் முருகானந்தம், கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் ராமநாத கிருஷ்ணன் நன்றி கூறினார்.

Spread the love