அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு நேரடியாகவே குடியுரிமை வழங்கப்படும் என்ற கொள்கையை ட்ரம்ப் ரத்து செய்தது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், சீனாவிற்கு வாழ்த்து தெரிவித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவு பேசுபொருளாகியிருக்கிறது.
அமெரிக்காவில் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு, அவர்களின் பெற்றோர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்படுகிறது. இதுவேபிறப்புரிமை குடியுரிமை என அழைக்கப்படுகிறது. இது அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் நடைமுறையில் உள்ளது. இந்த நடைமுறையை மாற்ற வேண்டும் என்பது டிரம்பின் நீண்டகால நிலைப்பாடு. சட்டவிரோதமாக அல்லது தற்காலிக விசாவில் அமெரிக்காவில் வசிக்கும் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாக குடியுரிமை வழங்கக் கூடாது என்று அவர் நிர்வாக உத்தரவு பிறப்பித்திருந்தார்.
ட்ரம்ப்x page
ஆனால், அந்த முயற்சிக்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், அமெரிக்க உச்ச நீதிமன்றம், பிறப்புரிமை குடியுரிமை தொடர்பான சட்டப் பாதுகாப்பை உடனடியாக நீக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம், அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது சட்டத்திருத்தம் தொடர்கிறது. இதையடுத்து, இந்தத் தீர்ப்பு டிரம்பின் குடியேற்றக் கொள்கைக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது

More Stories
ஐரோப்பிய நாடுகளில் கொளுத்தும் வெயில்: அனல் காற்றால் 1,300-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழப்பு
“AI மனிதனைவிட அதிக செலவுமிக்கது” – எச்சரிக்கும் Nvidia நிறுவன அதிகாரி!
பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்த ட்ரம்பின் உத்தரவை நிராகரித்தது அமெரிக்க உச்ச நீதிமன்றம்