நாட்றம்பள்ளி. ஜூலை-1
நாட்றம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் வெள்ளிப்பதக்கம் வழங்கும் விழா தலைமை ஆசிரியர் சங்கரன் தலைமையில் நடந்தது. திருப்பத்தூர் மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சி.இரவிவர்மன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
உதவித்தலைமை ஆசிரியர்கள் ராஜேந்திரன், முருகேசன், மகேந்திரன், பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பத்தூர் ரோட்டரி சங்க தலைவர் பன்னீர்செல்வம், பொருளாளர் அருண்குமார், பயிற்றுநர் ஏலகிரி செல்வம்,புகழேந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பிரிதிவிராஜன் நினைவு கல்வி அறக்கட்டளை நிறுவனர் லட்சுமிரவிவர்மன் சிறப்பிடம் பெற்ற 10,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை முதல் பரிசாக ரூ-5000,இரண்டாவது பரிசாக ரூ-3000,மூன்றாவது பரிசாக ரூ-2000 என ஆறு மாணவர்களுக்கு வழங்கினார். சங்கரன் வஜ்ஜிரம்மாள் அறக்கட்டளை நிறுவனர் ஆடிட்டர் ரவிக்குமார் ஆறு மாணவர்களுக்கும் தலா 10-கிராம் வெள்ளிப்பதக்கம் வழங்கினார். விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

More Stories
எஸ் டி பி ஐ வடக்கு மாவட்ட பயிலரங்கு நிகழ்ச்சி
வடுகபட்டி அரசு பள்ளியில், பரிசளிப்பு விழா தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், வடுகபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2025-2026ம் கல்வியாண்டில் 10ம் 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசளிப்பு விழா பள்ளி வளாக அரங்கில் நடைபெற்றது.இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக போடி குறிஞ்சி டெக்னாலஜி சொலுசன் நிர்வாக தலைவர் பிரபு கலந்துகொண்டு,மாணவிகளு
பெருமுளை முத்தையா சுவாமி பச்சையம்மன் திருக்கோவிலில் வரும் 5ம் தேதி கும்பாபிஷேகம்