October 6, 2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 629 மனுக்கள் பெறப்பட்டன

கரூர், அக்.6

: கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் . சி. முத்துக்குமரன், தலைமையில் (05.10.2026) நடைபெற்றது.

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும். ,ஒருமுறை அளித்த மனுக்கள் மீண்டும் அளிக்க வேண்டிய நிலை ஏற்படாத வகையில், ஒவ்வொரு மனுவின் மீதும் உரிய தீர்வு காணப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

அதனடிப்படையில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன்கள், பட்டா மாற்றம், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்பாடு தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 629 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.

, மாவட்ட ஆட்சியரகத்தின் தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் முகாமில் வீட்டுமனைப் பட்டா, உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 23 மனுக்கள் பெறப்பட்டன.

இதில்  மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.15,750 மதிப்பிலான சக்கர நாற்காலிகளும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.3,285 மதிப்பிலான காதொலி கருவிகளும் என மொத்தம் 4 பயனாளிகளுக்கு ரூ.38,070 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  சி. முத்துக்குமரன்,வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்  கு. விமல்ராஜ், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்)  வே. ராஜகோபால் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.

Spread the love