April 24, 2026

மேற்கு வங்க தேர்தலில் பாஜக வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெறும்: பிரதமர் மோடி நம்பிக்கை

கிருஷ்ணாநகர்: மேற்​கு​வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வரலாற்​றுச் சிறப்​புமிக்க வெற்​றியைப் பாஜக பெறும் என்று பிரதமர் நரேந்​திர மோடி நம்​பிக்கை தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்​கத்​தில் 2 கட்​டங்​களாகச் சட்​டப்​பேர​வைத் தேர்தல் நடை​பெறுகிறது. அங்கு நேற்று முதல் கட்​டத் தேர்தல் நடை​பெற்​றது. இரண்​டாம் கட்​டத் தேர்​தல் நடை​பெறும் கிருஷ்ணா நகர் உள்​ளிட்ட பகு​தி​களில் பிரதமர் மோடி நேற்று தீவிர பிரச்​சா​ரம் செய்​தார்.

அப்​போது அவர் கூறிய​தாவது: கடந்த 50 ஆண்​டு​களில் இல்லாத வகை​யில் மேற்கு வங்க முதல் கட்​டத் தேர்​தலில் வன்​முறை சம்​பவங்​கள் குறைந்​துள்​ளன. இதன்​மூலம் மக்கள் மாற்​றத்தை விரும்​புவது தெளி​வாகிறது. இந்த தேர்தலில் பாஜக வரலாற்று சிறப்​புமிக்க வெற்​றியைப் பெறும்.

10 வாக்​குறு​தி​கள்

அண்​மை​யில் மேற்கு வங்​கத்​தின் ஜார்​கி​ராம் பகு​தி​யில் ஜால்​முரி (கார பொரி) சாப்​பிட்​டேன். இந்த தின்​பண்​டத்தை விரும்பி சாப்​பிட்​டது நானாக இருந்​தா​லும் அதில் இருந்த காரத்தை திரிண​மூல் காங்​கிரஸார் உணர்ந்​தனர்.

மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்​கீட்டை அமல்​படுத்த வகை செய்​யும் மசோ​தாவை மக்​களவை​யில் திரிண​மூல் காங்கிரஸ் தோற்​கடித்​தது. இதற்​குப் பெண்​கள் தகுந்த பாடம் கற்​பிப்​பார்​கள். இந்த நேரத்​தில் மேற்கு வங்க பெண்களுக்கு 10 வாக்​குறு​தி​களை அளிக்க விரும்புகிறேன்.

1) மேற்கு வங்​கத்​தில் பாஜக ஆட்சி அமைத்​ததும் பெண்களுக்கு எதி​ரான குற்​றங்​களை இழைத்தவர்களுக்கு கடும் தண்​டனை வழங்​கப்​படும்.

2) ஒவ்​வொரு வட்​டத்​தி​லும் மகளிர் போலீஸ் நிலை​யம் அமைக்​கப்​படும்.

3) மேற்கு வங்க காவல் துறை​யில் பெண்​கள் அதி​கள​வில் சேர்க்​கப்​படு​வார்​கள்.

4) பெண்​களின் வங்​கிக் கணக்​கு​களில் மாதந்​தோறும் ரூ.3,000 என்ற வகை​யில் ஆண்​டு​தோறும் ரூ.36,000 நிதியுதவி வழங்​கப்​படும்.

5) பட்​டப்​படிப்பு மேற்​கொள்​ளும் மாணவி​களுக்கு தலா ரூ.50,000 உதவித் தொகை வழங்​கப்​படும்.

6) கர்ப்​பிணி​களுக்கு தலா ரூ.21,000 உதவித் தொகை வழங்கப்​படும்.

7) குழந்​தைகளின் ஊட்​டச்​சத்​துக்​காகத் தலா ரூ.36,000 வழங்​கப்​படும்.

8) லட்​சா​திபதி சகோ​தரி​கள் திட்​டத்​துக்கு ஊக்​கம் அளிக்கப்​படும். பெண்​கள் தொழில் தொடங்க ரூ.20 லட்​சம் வரை கடன் வழங்​கப்​படும்.

9) பெண் குழந்​தைகளுக்​காக சுகன்யா சம்​ரிதி யோஜனா திட்​டம் செயல்​படுத்​தப்​படும்.

10) பிஎம் அவாஸ் யோஜனா திட்​டத்​தில் கட்​டப்​படும் வீடுகள், பெண்​கள் பெயரில் பத்​திரப்​ப​திவு செய்​யப்​படும்.

பாஜக ஆட்சி அமைத்​தால் இந்த 10 வாக்​குறு​தி​களை​யும் கண்​டிப்​பாக நிறைவேற்​று​வோம். மேற்கு வங்​கத்தை 15 ஆண்​டு​கள் திரிண​மூல் காங்​கிரஸ் ஆட்சி செய்​துள்​ளது. ஆனால், மேற்கு வங்க மாநிலம் இன்​ன​மும் பின்​தங்​கிய நிலை​யில் உள்​ளது.

மேற்கு வங்க அரசின் அனைத்து துறை​களி​லும் ஊழல் வியாபித்து பரவி உள்​ளது. அரசு வேலைக்கு லஞ்​சம் கொடுக்க வேண்​டிய சூழல் உள்​ளது. ஒரு நிலத்தை வாங்க வேண்​டும் என்​றால் அதற்​கும் லஞ்​சம் கொடுக்க வேண்​டும். திரிண​மூல் காங்​கிரஸ் ஆட்​சி​யில் அண்டை நாட்​டில் இருந்து ஊடுரு​வல்​காரர்​கள் மேற்​கு​வங்​கத்​தில் நுழைந்து வரு​கின்​றனர்.

பாஜக ஆட்​சிப் பொறுப்​பேற்​கும் போது ஊடுரு​வல் முழு​மை​யாக தடுக்​கப்​படும். இரட்டை இன்​ஜின் ஆட்​சி​யால் மாநிலம் அதிவேக​மாக முன்​னேறும்​. மேற்​கு​வங்​க மக்​கள்​ மத்​தி​யில்​ அச்​சம்​ நீங்​கி​விட்​டது. பொது​மக்​கள்​ சுதந்​திர​மாக ​வாக்​களித்​து வரு​கின்​றனர்​. மே 4-ம்​ தேதி ​வாக்​கு எண்​ணிக்​கை​யின்​ போது மேற்​கு​வங்​கத்​தில்​ ​தாமரை மலரும்​. இவ்​​வாறு பிரதமர்​ மோடி பேசி​னார்​.

Spread the love