July 17, 2026

ரஷ்யா தடைகள் மசோதாவை தளர்த்த அமெரிக்கா முடிவு: இந்தியா மீதான வரி 500%-ல் இருந்து 100% ஆக குறையும்

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்​கும் நாடுகளுக்கு 500% வரி விதிக்க திட்​ட​மிட்​டிருந்த அமெரிக்கா, அதை 100% ஆக நிர்​ண​யிக்க முடிவு செய்​துள்​ளது.

அமெரிக்​காவைச் சேர்ந்த குடியரசு கட்சி செனட்​டர் லிண்ட்சே கிரஹாம் மற்​றும் ஜனநாயகக் கட்சி செனட்​டர் ரிச்​சர்ட் புளூமெண்​டல் ஆகியோர் ‘ரஷ்யா மீதான தடைகள் மசோ​தா’வை ஓராண்​டுக்கு முன்பு நாடாளு​மன்​றத்​தில் தாக்​கல் செய்​தனர். இதில் லிண்ட்சே கிரஹாம் உடல்​நலக்​குறைவு காரண​மாக கடந்த வாரம் கால​மா​னார்.

இந்​நிலை​யில், இந்த இரு ​கட்சி மசோ​தா​வின் திருத்தப்பட்டபதிப்பை அமெரிக்க நாடாளு​மன்ற உறுப்​பினர்​கள் வெளி​யிட்​டுள்​ளனர். இதில், ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெய் இறக்​குமதி செய்​யும் இந்​தி​யா, சீனா போன்ற நாடு​கள் மீதான அசல் 500% வரி விதிப்பு முன்​மொழிவு தளர்த்​தப்​பட்​டுள்​ளது. இந்த மசோதா சம்​பந்​தப்​பட்ட நாடு​கள் மீது 100% வரை வரி விதிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​புக்கு அதி​காரம் வழங்க வகை செய்கிறது.

உக்​ரைன் மீதான ரஷ்​யா​வின் 4 ஆண்​டு​கால போரை நிறுத்த மாஸ்​கோவுக்​குப் பொருளா​தார ரீதி​யாக அழுத்​தம் தரு​வது​தான் இந்த மசோதாவின் நோக்​க​ம் ஆகும். ரஷ்ய கச்சா எண்​ணெயை அதி​க அளவில் வாங்​கும் முதல் 5 நாடு​களில் இந்​தி​யா​வும் சீனாவும் அடங்​கும். எனவே, இந்த வரி விதிப்பு அமலா​னால், இரு நாடு​களு​ட​னான அமெரிக்​கா​வின் வர்த்தக உறவு​கள் பாதிக்கப்படலாம்.

திருத்​தப்​பட்ட மசோ​தா​வில், ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெய் வாங்​கும் முதல் 5 நாடு​கள் மீதான வரி அதி​கபட்​சம் 100% ஆகக் குறைக்​கப்​பட்​டுள்​ளது. ரஷ்ய இயற்கை எரி​வா​யுவை 15%-க்​கும் குறை​வாக இறக்​குமதி செய்​து, அதைத் தவிர்க்க முயற்​சிக்​கும் நாடு​களுக்கு (ஜப்​பான், பிரான்ஸ் போன்​றவை) விலக்கு அளிக்கப்படலாம்.

ரஷ்​யா​வின் நிழல் கப்​பற்​படை, மத்​திய வங்கி மற்​றும் யமல் எல்என்ஜி போன்ற அரசு எரிசக்தி திட்​டங்​கள் மீது தடைகள் விதிக்கப்​படும். அமெரிக்க தேசிய நலன் கருதி அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்​தத் தடைகளைத் தள்​ளு​படி செய்​ய​வும் இதில் வழி வகை செய்​யப்​பட்​டுள்​ளது.

அதிபர் ட்ரம்​புடன் உடன்​பாடு ஏற்​படுத்​திக் கொள்ள வசதி​யாக இந்த மசோதா தளர்த்​தப்​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது. மறைந்த செனட்​டர் கிரஹா​முக்கு மரி​யாதை செலுத்​தும் வகை​யில் இந்த மசோதா விரை​வில் சட்​ட​மாகும் என ட்ரம்ப் நம்​பிக்கை தெரிவித்துள்​ளார்.

மேலும், ஈரான் மற்​றும் லெபனானின் ஹிஸ்​புல்லா அமைப்பு மீதான தடைகளை​யும் இதில் சேர்க்க அவர் விரும்​பு​கிறார். எனினும், மசோ​தாவை மாற்​றாமல் அப்​படியே நிறைவேற்ற வேண்​டும் என புளூமெண்​டல் வலி​யுறுத்​தி​யுள்​ளார். ரஷ்ய பாதுகாப்​புத் துறை​யுடன் இணை​யும் ஈரான் போன்ற நாடு​களும் இந்த மசோ​தா​வால்​ பா​திக்​கப்​படும்​ என செனட்​ உதவி​யாளர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

Spread the love