ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி கடமலை குண்டு தி.மு.க.நிர்வாகிகள் கூட்டம்.ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு. ஆண்டிபட்டி,மார்ச் 20, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி கடமலைக்குண்டு – மயிலாடும்பாறை ஒன்றிய தி.மு.க.நிர்வாகிகள் கூட்டடம் கடமலைகுண்டு தனியார் மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தேனி தெற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ.தலைமை தாங்கினார். ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.மகாராசன், கடமலை, மயிலை, ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன், தங்கபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது. தென்மாவட்டங்களில் சொந்தபந்தங்களை சந்தித்து அவர்களிடம் உரையாற்றிவருகிறேன். எல்லோரும் மீண்டும் தி.மு.க.ஆட்சி வரவே விரும்புகிறார்.. தென்மாவட்டங்களில் மாநாடுகள் நடத்தியும், தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்கள் நாட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு மக்களுக்கும் என்ன தேவை என்று பார்த்து பார்த்து நமது முதலமைச்சர் திட்டம் தீட்டி நடைமுறை படித்து வருகிறார். ஒரே நாள் இரவில் ரூ 5 ஆயிரம் மகளிர் உதவிதொகையை வழங்கி பெண்களுக்கான அரசாக செயல்பட்டு வருகிறார். ஒன்றிய அரசு நிதிகளை வழங்காமல் தொடர்ந்து இடையூறுகளை செய்து வரும் சூழ்நிலையில், மாநில நிதிகளை கொண்டே மக்களின் தேவைகளை திறம்பட பூர்த்தி செய்துவருகிறார். நமது முதலமைச்சர். மாநில சுயாட்சியை நிலைநாட்டி தமிழகம் ஒரு போதும் தலை குனியாது என்று முழக்கமிடுகிறார். எடப்பாடி அ.தி.மு.க. கட்சியை டெல்லியில் அடமானம் வைக்கிறார். தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து .இது நாள்வரை தமிழகத்தில்தான் நடந்து வருகிறது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று அங்கே பேச்சுவார்த்தை நடத்தி தமிழகத்தையும், கட்சியையும் அடமானம் வைக்கிறார். தளபதி அரசு. தொகுதி பங்கீட்டிற்காக எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் இரண்டு நாட்களாக தவம் கிடக்கிறார். மாநில சுயாட்சியையும், கட்சியையும் டெல்லியிடம் அடமானம் வைக்கிறார். துரோகத்தின் மொத்த உருவம் எடப்பாடி, துளி அளவு கூட நன்றி என்பதே கிடையாது. நாலரை ஆண்டுகள் எடப்பாடி ஆட்சி செய்ய ஒத்துழைப்பு தந்தேன். ஆனால் என்னை கட்சியைவிட்டு வெளியேற்ற, பின்னால் சதிவேலை செய்தது எனக்கு பின்னரே தெரியவந்தது. என்று பேசினார். கூட்டத்தில் மாநிலத் தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் செல்வேந்திரன். மாநில தீர்மானக் குழு இணைச் செயலாளர் ஜெயக்குமார் மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் ஆசையன். மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாண்டியன். மாவட்ட துணை செயலாளர்கள் வேப்பம்பட்டி செந்தில். மலைச்சாமி . மற்றும் ஒன்றிய செயலாளர்கள் இளைஞரின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி கடமலை குண்டு தி.மு.க.நிர்வாகிகள் கூட்டம்.ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு

More Stories
கந்திலி கிழக்கு ஒன்றியத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழாவில் 100 மரக்கன்றுகள் 500 பேருக்கு அன்னதானம் ஏற்பாடு செய்த. ஒன்றிய செயலாளருக்கு பொது மக்கள் வாழ்த்து
திண்டுக்cIகல்லி CITU மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் வேலை நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மருத்துவ மனைகளும், மருத்துவர்களும் தாக்கப்பட்டு வருவதை கண்டித்து வருகின்ற வெள்ளிக்கிழமை (26.06.26) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற போவதாக மகப்பேறு மருத்துவ மாநில தலைவர் அமலாதேவி திண்டுக்கல்லில் பேட்டி.