ஒட்டன்சத்திரம் ஏப்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடையகோட்டை பேருந்து நிலையம் முன்பாக சட்ட மாமேதை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுடைய 135-வது ஆண்டு பிறந்தநாள் விழா சிறப்பான முறையில் இனிப்பு வழங்கியும் புரட்சியாளர் அவர்களின் தியாகங்களையும் நினைவு கூர்ந்து அவரது பிறந்தநாளை இடையகோட்டை முகாம் மற்றும் வலையபட்டி முகாம் ஆகிய இரு முகாம்களும் ஒன்றிணைந்து புரட்சியாளர் அம்பேத்கர் அவருடைய பிறந்தநாளை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிறப்பான முறையில் பிறந்தநாள் நிகழ்வு கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை இளைஞரணி மாவட்ட செயலாளர்
சு.வடிவேல் தலைமை தாங்கினார். நிகழ்வை வலையபட்டி முகாமைச் சார்ந்த சக்திவேல் ஒருங்கிணைத்து கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் சிறப்பான முறையில் கலந்து கொண்டு அம்பேத்கர் அவர்களுடைய பிறந்தநாளில் அவருடைய திருவுருவப்படம் வைத்து மாலை அணிந்து இனிப்பு வழங்கியும் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. நிகழ்வில் ரஞ்சித், பாலன், வீரமணி அஜய் , அழகர் திருமண நடராஜ் ரவி, சுப்பிரமணி ரவி, சதீஷ் போன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்கள்.

More Stories
கரூர்
22-09-2026
கரூர் மாவட்டம்