கரூர், அக்.9:
கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4.36 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 10 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காதப்பாறை ஊராட்சியில் மாவட்ட கனிம நிதியின் கீழ் ரூ.3 கோடி மதிப்பீட்டில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானபணி, சேமிப்பு நிதியின் கீழ் ரூ.70.64 லட்சம் மதிப்பிலான காந்தி நகர் சாலை புதுப்பிக்கும் பணி பி.கடம்பங்குறிச்சி ஊராட்சியில் சேமிப்பு நிதி – உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பண்டுதகாரன்புதூர் பிசிதெரு மற்றும் பால்வார்பட்டியில் கட்டப்பட்டு வரும் இரண்டு புதிய சமுதாயக் கூடங்களின் கட்டுமானப் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் சி.முத்துகுமரன் ஆய்வு செய்தார்.
அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் குழந்தைகளின் கற்றல் திறன்குறித்தும் பெரிய வரப்பாளையத்தில் ரூ.7.42 லட்சம் மதிப்பீட்டில் மயானம் அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
என்.புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு தயாரிக்கும் சமையல் கூடத்தையும்
தொடர்ந்து, விபிஜி ராம்திட்டத்தின் கீழ் ரூ.6.88 லட்சம் மதிப்பீட்டில் கருப்பண்ணசாமி கோவில் கிழக்குப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மரக்கன்று நாற்றங்கால் பணி
எல்லையூர் கோவில் முதல் சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் நடவு மற்றும் பராமரிப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் சி.முத்துகுமரன் நேரில் ஆய்வு செய்தார்.

More Stories
கரூர் புதிய பஸ் நிலையத்தில் திமுக ஆட்சி சாதனை பதாகைகள் அகற்றபட்டது.
ராமநாதபுரத்தில் புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு!
ராமநாதபுரம் மாவட்டம்