பெரியகுளம் நகரில் ஜெயலலிதா பிறந்தநாள், அன்னதானம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா 78 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, தேனி மாவட்டம், பெரியகுளம் நகரில் மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை எம்.பி இராமர் கலந்துகொண்டு அன்னதானத்தை பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பெரியகுளம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அன்னபிரகாஷ், பெரியகுளம் நகர கழக செயலாளர் பழனிவேல் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெரியகுளம் நகர்மன்ற உறுப்பினரும், தேனி கிழக்கு மாவட்ட கழக இணை செயலாளருமான கே.எம்.எம் முத்துலட்சுமி வெங்கடேஷ் சிறப்பாக செய்திருந்தார்.

More Stories
07-08-2026
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு