July 21, 2026

திண்டுக்கல் சென்ட் ஜோசப் சி.பி.எஸ்.சி மேல்நிலைப் பள்ளியில் 70வது பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர் பர்வீன் சுல்தானா, உதவி பேராசிரியர் இர்வின் விக்டோரியா, திண்டுக்கல் மறைமாவட்டம் விகாரம் ஜென்ரல் சகாயராஜ்,
மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) ஜான் பிரிட்டோ, பள்ளி தாளாளர் ஃபாபியோல ரேக்சி, ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினர்.
விழாவில் கல்வி, விளையாட்டு மற்றும் இணைப் பாடத்திட்ட செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், இசை, நடனம் மற்றும் நாடக நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
இந்த ஆண்டு விழாவில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
பள்ளியின் முதல்வர் அருட் சகோதரி புனிதா விழாவிற்கான ஏற்பாட்டினை செய்திருந்தார்.

Spread the love