திருப்பதி: ஆந்திராவில் விசாகப்பட்டினம், விஜயவாடா, குண்டூர், கடப்பா, நெல்லூரில் கரோனா தொற்று பரவி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் 25 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் திருப்பதி நகரின் எஸ்டிவி நகரை சேர்ந்த 65 வயது பெண்மணிக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தனியார் மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவரது குடும்பத்தினருக்கும் கரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

More Stories
“அவர்கள் பொய்களைப் பரப்பினார்கள்; இப்போது எனது தாயார் உண்மையை சொல்கிறார்”: பிரியங்கா காந்தி
ஜம்மு காஷ்மீரில் காணாமல் போன 2 காவலர்கள் சடலமாக மீட்பு
ஆந்திராவில் காங்கிரஸுக்கு ஒரு கவுன்சிலர்கூட இல்லை