ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே உள்ள ஒப்பிலா கிராமத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மீனவ குடும்பங்களை வெளியேற்ற வனத்துறையினர் தொடர்ந்து இடையூறு செய்வதாக குற்றம்சாட்டி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் தங்களை வெளியேற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுவார்கள் என்றும் மனுவில் தெரிவித்துள்ளனர்.
மேலும், வனத்துறையினர் நடவடிக்கையை நிறுத்தாவிட்டால் வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, தங்களது குடியிருப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு நிரந்தர பாதுகாப்பு வழங்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்

More Stories
கீழக்கரையில் பன்றிகள் அப்புறப்படுத்தல்
அமைச்சர்கள் முன்னிலையில் சமுதாய வலைகாப்பு!
கரூர் மாவட்டம்