October 9, 2026

கீழக்கரை நகர் இருளில் – ஹைமாஸ் விளக்குகளை சீரமைக்க கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை 15-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் ஹைமாஸ் மற்றும் தெருவிளக்குகள் பழுதடைந்து செயல்படாமல் இருப்பதால், இரவு நேரங்களில் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்குகளில் பல முறையான பராமரிப்பின்றி பழுதடைந்துள்ளதாகவும், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடற்கரை பகுதி மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் விளக்குகள் செயல்படாததால் பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இரவு நேரங்களில் செல்ல அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இருளான பகுதிகளில் சமூக விரோத செயல்கள் நடைபெறும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

மேலும், கீழக்கரையில் பழுதடைந்துள்ள ஹைமாஸ் மற்றும் தெருவிளக்குகளை உடனடியாக ஆய்வு செய்து, போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்றும், பொதுமக்களின் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்காத நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் கீழக்கரை நகராட்சியை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Spread the love