திண்டுக்கல், ஆக. 6: தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகள் முன்பு செவிலியர்கள் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அரசாணை 204-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும், ஒப்பந்த செவிலியர்களை நிரந்தரப் பணியில் அமர்த்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் செவிலியர்களுக்கு நர்சிங் ஆபிசர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
தென் மண்டல செயலாளர் ஜோதி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மருத்துவமனைகளில் ஏற்கனவே செவிலியர் பற்றாக்குறை நிலவுவதாகவும், தற்போது பணியாற்றும் செவிலியர்களை வேறு மருத்துவக் கல்லூரிகளுக்கு மாற்றும் அரசின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

More Stories
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது
ஈரோடு