சென்னை: அதி நவீன இயந்திரங்கள் வாங்குவதற்கான கடன் வசதி கிடைப்பதை எளிதாக்க இந்தியாவின் வங்கிசாரா நிதி நிறுவனமான சுந்தரம் பைனான்ஸ், தானியங்கி இயந்திரங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜிஎம்டி இன்ஜினியர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இதுகுறித்து சுந்தரம் பைனான்ஸ் எஸ்எம்இ பிரிவின் தலைவர் ராகுல் ஜோதி குமரன் கூறியதாவது: உற்பத்தித் துறையைச் சேர்ந்த தொழிலதிபர்கள், ஜிஎம்டி இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் அதிநவீன ‘சிஎன்சி பெண்டிங்’ இயந்திரங்கள், ஃபைபர் லேசர் கட்டிங் சிஸ்டம்கள், பவர் பிரஸ்கள் மற்றும் ஆட்டோமேஷன் உபகரணங்களை எளிதாகவும் விரைவாகவும் வாங்குவதற்கு ஏதுவாக நிதி உதவிகளை வழங்குவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம்.
சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் மற்றும் தொழில்முறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி தொழில்நுட்பங்களை எளிய முறையில் பெற இந்த நடவடிக்கை வழிவகுக்கும். சுந்தரம் பைனான்ஸின் விரைவான நிதிச் சேவை மற்றும் ஜிஎம்டி இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் உயர்ரக இயந்திரங்கள் மூலம், உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தித் திறனை அதிகரித்து, பெரிய அளவிலான தொழில் வாய்ப்புகளை நம்பிக்கையுடன் பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

More Stories
பவுனுக்கு ரூ.240 குறைந்த தங்கம் விலை: இன்றைய சந்தை நிலவரம் என்ன?
சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ.66.50 உயர்ந்து ரூ.2,983க்கு விற்பனை
ஈரான் போர் எதிரொலி.. ஒரே ஆண்டில் மூன்றாம் முறை உயர போகும் வீட்டு உபயோக சாதனங்களின் விலை.!!