
சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.13) காலை வர்த்தகம் தொடங்கியதும் பவுனுக்கு ரூ.1,600 என குறைந்தது. இதேபோல வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.20,000 என விலை சரிந்தது.
உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
இந்தச் சூழலில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வருகிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு முக்கிய காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று (பிப்.13) காலை சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,400-க்கு விற்பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.1,600 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,15,200-க்கு விற்பனை ஆகிறது.
இதேபோல 24 காரட் சுத்த தங்கம் பவுனுக்கு ரூ.1,752 என குறைந்து, ஒரு பவுன் ரூ.1,25,672-க்கு விற்பனை ஆகிறது. 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.1,600 என குறைந்து, ஒரு பவுன் ரூ.99,200-க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.280-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,80,000-க்கும் சந்தையில் விற்பனை ஆகிறது. பிளாட்டினம் விலை கிராமுக்கு ரூ.259 என விலை குறைந்து ஒரு கிராம் ரூ.5,914-க்கு விற்பனையாகிறது.

More Stories
‘நாங்கள் ஏழையாக வாழ வேண்டுமா?’ – பிஹார் எம்எல்ஏ மைதிலிக்கு ஆதரவாக கங்கனா கேள்வி
திருப்பதி பிரம்மோற்சவ விழா சர்வ தரிசனத்துக்கு 8 கி.மீ. தூரம் நடக்க வேண்டுமா? – பக்தர்கள் அதிருப்தி
‘பிரதமர், அவரது தாய் குறித்த பேச்சு தரக்குறைவானது’ – ராகுல் காந்திக்கு பாஜக மூத்த தலைவர்கள் கண்டனம்