சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று பவுனுக்கு ரூ.400 என்று குறைந்துள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் கடந்த 7 நாட்களாக மாற்றமின்றி சந்தையில் விற்பனை ஆகிறது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. அது சர்வதேச அளவில் தங்கம் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மே மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதையடுத்து தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. நேற்று (திங்கட்கிழமை) தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 என உயர்ந்திருந்தது.
இன்றைய விலை விவரம்
இந்தச் சூழலில் தங்கம் விலை சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் 13,200-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,05,600-க்கு விற்பனையாகிறது.
24 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.55 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,400-க்கு விற்பனையாகிறது. 18 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,015-க்கு விற்பனையாகிறது.
இன்று வெள்ளி விலையை பொறுத்தவரையில் மாற்றம் ஏதுமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,35,000-க்கும் விற்பனையாகிறது.

More Stories
சிவகாசி அச்சகங்களில் 2027 காலண்டர் ஆல்பம் வெளியீடு: 15% வரை விலை உயர்வு
இந்த ஆண்டு தங்கம் விலை 37% சரிய வாய்ப்பு: உலக தங்க கவுன்சில்
வாட்ஸ்அப் கணக்குகளை ‘ரிவ்யூ’ செய்யும் மெட்டா: பாதிக்கப்பட்ட பயனர்கள் புகார்