August 5, 2026

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் மாணவர் சேர்க்கை செப்.15 வரை நீட்டிப்பு

சென்னை: 2026- 27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மாநில அரசு பல்கலைக்கழகமான தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தொலைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் பல்வேறு பாடப்பிரிவுகளில் 15 இளங்கலை பட்டப்படிப்புகள், 154 முதுகலை படிப்புகள் மற்றும் 48 டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது.

இந்ந நிலையில், 2026- 27ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பாடத்திட்ட விவரங்கள், கட்டணம், சேர்க்கை நடைமுறைகள் தொடர்பான விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.tnou.ac.in) அறிந்துகொள்ளலாம் என பதிவாளர் ஜி.ஆர்.செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Spread the love