May 17, 2026

திருப்பூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. பல்லடம் சட்டமன்ற தொகுதி ஆலோசனை கூட்டம் புதிதாக புறநகர் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவசாமி தலைமையில் பல்லடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.  இதில் பல்லடம் முன்னாள்.எம்.எல்.ஏ.,

கரைப்புதூர் நடராஜன், அதிமுக அவைத்தலைவர் சிவாச்சலம், மாவட்டத் துணைச் செயலாளர் ராமமூர்த்தி, மாநில அம்மாவை துணைச் செயலாளர் புத்தெரிச்சல் பாபு, கழக வழக்கறிஞர் துணைச் செயலாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Spread the love