பழனி பிப்ரவரி 18
பழனியில் புகழ்பெற்றது மாரியம்மன் கோயில் ஆகும். இக் கோயிலில் கடந்த 6ஆம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு திருவிழா நிகழ்ச்சிகள் தொடங்கியது. பிப்ரவரி 17ஆம் தேதி கொடியேற்றமும், பூவோடு வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று இரவு ஒன்பது மணிக்கு மாரியம்மன் தங்கமயில் வாகனத்தில் திருஉலா வரும் காட்சி நடைபெற்றது. முன்னதாக கொடியேற்று விழாவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வ சுப்ரமணியம் குருக்கள் மற்றும் கோயில் உதவி ஆணையர் லட்சுமி, கண்காணிப்பாளர் அழகர்சாமி, காணியாளர் பண்ணாடி ராஜா, காணியாளர் நரேந்திரன், பில்டிங் காண்ட்ராக்டர் நேரு, பெரியநாயகி கல்வி அறக்கட்டளை சுந்தரம், முன்னாள் கவுன்சிலர்கள் துரை செல்லபாண்டியன், தங்கராஜ் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்

More Stories
செவிலியர்கள் போராட்டம்: 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்..
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது