சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) கே.ராஜசேகரன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நடப்பு கல்வி ஆண்டில் (2026-27) பிஎட், எம்எட் மாணவர் சேர்க்கை விவரங்களை ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் ஆன்லைனில் சமர்ப்பி்ப்பதற்கான கடைசி நாள் செப்டம்பர் 21 வரை நீட்டிக்கப்படுகிறது.
எனவே, பல்கலைக்கழதத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்கள் தங்கள் கல்லூரிகளில் பிஎட், எம்எட் படிப்புகளில் மேற்கொள்ளப்பட்ட மாணவர் சேர்க்கை விவரங்களை நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதற்குமேல் காலநீட்டிப்பு வழங்கப்படாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More Stories
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் கவிதா தகவல்
பிஎச்டி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
பிளாஸ்டிக் டெக்னாலஜி படிப்புகளுக்கு நேரடி சேர்க்கை: மத்திய அரசின் சிப்பெட் நிறுவனம் அறிவிப்பு