ஒட்டன்சத்திரம் மார்ச்:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ326.00லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையாளர் ஸ்வேதா, ஒட்டன்சத்திரம் நகராட்சி பொறியாளர் சுப்பிரமணிய பிரபு,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபு பாண்டியன்,காமராஜ் ஒட்டன்சத்திரம் உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், பொறியாளர் ஸ்ரீநிதி, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை பொறியாளர் (மதுரை) சந்திரா,மேற்பார்வை பொறியாளர் (திண்டுக்கல்)சைமன் சார்லஸ், செயற்பொறியாளர் (பழனி)சந்திரசேகரன், திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, தொப்பம்பட்டி விளையாட்டு அரங்க அலுவலர் சுப்பிரமணி, ஒட்டன்சத்திரம் நகர்மன்ற தலைவர் திருமலைச்சாமி மற்றும் துணைத் தலைவர் வெள்ளைச்சாமி,தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

More Stories
07-08-2026
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு