October 6, 2026

ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இறகுப்பந்து போட்டி

ராமநாதபுரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உள் விளையாட்டு அரங்கில், முதல்வர் கோப்பைக்கான மாற்றுத்திறனாளிகளுக்கான இறகுப்பந்து போட்டி நடைபெற்றது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஹரிகரன் முதலிடமும், முனீஸ் குமார் இரண்டாமிடமும், சையது அப்துல் ரகுமான் மூன்றாமிடமும் பெற்றனர். இரட்டையர் பிரிவில் ஹரிகரன்–முனீஸ் குமார் ஜோடி முதலிடம் பெற்றது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ராஜேஸ்வரி முதலிடமும், மகாலட்சுமி இரண்டாமிடமும், பாதம் பிரியாள் மூன்றாமிடமும் பெற்றனர். இரட்டையர் பிரிவில் ராஜேஸ்வரி–ஆனந்தி ஜோடி முதலிடம் பெற்றது.

வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார், பயிற்சியாளர் ரஞ்சித் குமார் உள்ளிட்டோர் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினர். போட்டியை மாவட்ட இறகுப்பந்து கழக நிர்வாகிகள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் சிறப்பாக நடத்தினர்.

Spread the love