June 5, 2026

லீவு எல்லாம் முடிஞ்சுது: நாளை முதல் ஸ்கூலுக்கு போங்க – பள்ளிகள் திறப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை இன்றுடன் நிறைவடைகிறது. தொடர்ந்து நாளை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை முன்னிட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கோடை விடுமுறை நிறைவடைந்ததை ஒட்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பின்படி முதலில் பள்ளிகள் ஜூன் ஒன்றாம் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம்

கோடை வெப்பம், வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தேதியில் பரிசீலனை செய்யுமாறு ஆசிரியர்கள், பெற்றோர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்த நிலையில், பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் கொண்டு வந்தது பள்ளிக்கல்வித்துறை.

  

நாளை முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு

அதன்படி பள்ளிகள் அனைத்தும் நாளை முதல் செயல்பட தொடங்குகின்றன. அந்த வகையில் பள்ளிகளை சீரமைக்கும் பணிகள், அதாவது பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணியில் தூய்மை பணியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

பள்ளிகள் திறப்புக்கான பணிகளில் தீவிரம்

மேலும் வகுப்பறைகள், பள்ளி வளாகம், சமையலறை, நீர்த்தேக்க தொட்டிகள், கழிவறை சுத்தம் செய்யும் பணிகள் உள்ளிட்டவைகள் தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர், மேலும் வகுப்பறை கரும்பலகை வண்ணம் தீட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

காலை உணவுத் திட்டம் தொடருமா?

கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காலை உணவு திட்டம் தொடரும் என்று தவெக அரசு தெரிவித்து இருந்தாலும், நாளை முதல் நாள் என்பதால் அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற சந்தேகங்கள் பெற்றோர்கள் மத்தியில் எழுகின்றன.

சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்

இதனால் தனது குழந்தைகளுக்கு அவர்களே உணவு ஏற்பாடும் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. கோடை விடுமுறையை குழந்தைகளுடன் செலவிட வெளியூர் சென்றவர்களும், கடந்த (மே 31 ஆம் தேதி) ஞாயிறு அன்று சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர்.

நகரங்களை நோக்கி மக்கள் பயணம்

இருந்த போதும் நாளை பள்ளிகள் திறக்கப்படுவதால், இன்றும் அதிக அளவில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு படை எடுத்து வருகின்றனர். குறிப்பாக சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களை நோக்கி மக்கள் அதிகம் பயணிக்க தொடங்கியுள்ளனர்.

மாணவர்களுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம்

பள்ளிகள் திறப்பு காரணமாக சொந்த ஊர் திரும்பும் பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதியும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், இன்றே குழந்தைகளுக்கு தேவையான பென்சில், பேனா, சீருடை போன்ற அடிப்படைத் தேவை பொருட்களும் வாங்க பெற்றோர்கள், குழந்தைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மாணவர்களிடத்தில் உற்சாகம்

மாணவர்களிடத்திலும் புதிய வகுப்பு, புதிய பாடப் புத்தகங்கள், புதிய நண்பர்கள் என்ற உற்சாகம் அதிகம் காணப்படுகிறது. ஒரு சில மாணவர்கள் இடத்தில் அதற்குள் விடுமுறை முடிந்து விட்டதே என்ற சோகம் தென்பட்டாலும், நாளை பள்ளிகள் திறப்பை முன்னிட்டு அவர்களிடத்திலும் புதிய உற்சாகம் பிறந்துள்ளது.

ஏன் Leave விடல? மழையில எப்படி School போவாங்க?இவ்வளவு நாட்கள் தனது குழந்தைகளை வீட்டில் வைத்துக் கொண்டு, அவர்களின் சேட்டைகளுக்கு எப்போது தான் விடிவுகாலம் பிறக்குமோ என்று நினைத்திருந்த பெற்றோர்களுக்கு பெரும் மூச்சு விடும் நாளாக நாளைய தினம் அமைந்திருக்கிறது. ஏதாவது ஒரு வகையில் தனது குழந்தையும் படித்து முன்னேற வேண்டும் என்பது அனைத்து பெற்றோர்களின் கனவாக மாறி விட்டது.

Spread the love