என் பள்ளி என் கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம்
ஒட்டன்சத்திரம் ஜூன்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை, குஜிலியம்பாறை ஆகிய வட்டாரங்களில் திண்டுக்கல் ஹோப் நிறுவனத்தின் சார்பாக என் பள்ளி என் கல்வி விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஹோப் நிறுவனத்தின் தலைவர் என்.பழனிச்சாமி குஜிலியம்பாறையில் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து உல்லியக்கோட்டையில் ஹோப் நிறுவன அமைப்பாளர் ஜி.மகாலட்சுமி, ஹோப் நிறுவனத்தலைவர் என்.பழனிச்சாமி ஆகியோர் என் பள்ளி என் கல்வி விழிப்புணர்வு திட்டத்தை துவக்கி வைத்து முதல் வகுப்பில் சேரும் 10 குழந்தைகளை பள்ளியில் சேர்த்தார்கள்.
பள்ளி குழந்தைகள் இடைநிற்காமல் படிக்க வேண்டும் என்று கூறினார்கள். தொடர்ந்து வடுகம்பாடியில் என் பள்ளி என் கல்வி திட்டத்தை ஹோப் நிறுவன ஒருங்கிணைப்பாளர் எம்.மகாலட்சுமி தொடங்கி வைத்தார். கருத்தா மோடிவேஷன் சென்டர் தலைவி மற்றும் ஆசிரியர் பங்கேற்று கல்வியின் முக்கித்துவத்தை விளக்கி கூறினார்கள். வடமதுரை ஒன்றியத்தில் புத்தூர் பகுதியில் மணிமாறன் தலைமையில் என் பள்ளி என் கல்வி திட்டப் பிரச்சாரம் தொடங்கி வைக்கப்பட்டது.

More Stories
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் உடன் இருந்தார்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் மற்றும் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
ரூ100 கோடி நில மோசடி வழக்கு