ஒட்டன்சத்திரம், நவ-4
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், விருப்பாட்சி கிராமத்தில் அமைந்துள்ள அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில், ஒட்டன்சத்திரம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு தொழிற்பயிற்சி மையத்தின் முதல்வர் தீனதயாளன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் என். பழனிச்சாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு சட்டங்கள் குறித்து விரிவான விளக்கங்களை வழங்கினார்.
குறிப்பாக, குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டங்கள் மற்றும் அதற்கான தண்டனைகள், புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்பு, குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பிற்காக செயல்படுத்தப்படும் அவசர உதவி எண்கள் குறித்து தெளிவாக எடுத்துரைத்தார்.
மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டம், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்கும் சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் பயிற்சி அலுவலர் ரமாதேவி, வழக்கறிஞர் கார்த்திக் ஸ்ரீராம், சட்ட உதவி மைய தன்னார்வலர் காளியாதேவி மற்றும் அரசினர் தொழிற்பயிற்சி மைய மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.
சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தும் வகையில் இம்முகாம் பயனுள்ளதாக அமைந்தது.

More Stories
கரூர் மாவட்டம்
பழனியில் களமிறங்கிய எஸ்.பி ஜெயக்குமார் ஐ.பி.எஸ்
பழனி