April 24, 2026

மே4ந்தேதி வாக்கு எண்ணிக்கை – வாக்குபெட்டிகளுக்கு 18ஆயிரம் போலீசார் பலத்த பாதுகாப்பு

சென்னை: தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 4ந்தேதி நடைபெற உள்ளது. அதுவரை அனைத்து வாக்குப்பெட்டிகளும் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டு,  தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் பத்திரமாக சேர்க்கப்பட்டு அறைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த அறைகள் அனைத்தும் முழுமையான சிசிடிவி கண்காணிப்புடன் உள்ளது.  இதன் கண்காணிப்பு பணியில்  18 ஆயிரம் போலீஸாா்  ஈடுபட்டுள்ளனா்.

Spread the love