சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (மே 19) பவுனுக்கு ரூ.960 என உயர்ந்துள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று சந்தையில் மாற்றம் ஏதுமில்லை.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை முதலீடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் (மே 13) தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதையடுத்து அன்றைய தினம் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.670 உயர்ந்தது. தொடர்ந்து மே 14-ம் தேதி கிராமுக்கு ரூ.50 என தங்கம் விலை உயர்ந்தது. கடந்த 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தங்கம் விலை முறையே கிராமுக்கு ரூ.285, ரூ.15 என குறைந்தது. இந்நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் கிராமுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,870-க்கும், பவுனுக்கு ரூ.960 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,18,960-க்கும் விற்பனையாகிறது.
24 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.1,048 என விலை உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,29,776-க்கும், 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.800 என விலை உயர்ந்து, ஒரு பவுன் ரூ.99,280-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.300-க்கும், கட்டி வெள்ளி கிலோ ரூ.3,00,000-க்கும் விற்பனையாகிறது.

More Stories
நாம் கடின காலத்துக்கு தயாராக வேண்டுமா? – எரிபொருள் விலை உயர்வும் தாக்கமும்
தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைவு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?
தங்கம் உயர்வு, வெள்ளி குறைவு – இன்றைய விலை நிலவரம்