July 7, 2026

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு: சிபிஐ நடவடிக்கை எடுக்க திமுக கோரிக்கை – இன்று விசாரணை

கரூர் கூட்ட நெரிசல் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக திமுக தாக்கல் செய்த வழக்கை அவசர வழக்காக இன்று (ஜூலை 07) இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக சார்ப்பில் நடத்தப்பட்ட பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பொதுவெளியில் பேச தடை விதிக்கக் கோரி திமுக சார்பில் ஆர்.எஸ். பாரதி மனு தாக்கல் செய்தார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு எதிர்ப்பு:

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கரூர் வழக்கில் மற்றொரு குற்றவாளியான அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கடந்த ஜூலை 2, 2026 அன்று பொது மேடையில் கரூர் சம்பவத்திற்குப் பழிவாங்க வேண்டியுள்ளது. கடந்த திமுக அரசு போலீஸ் வைத்தே கரூர் மக்களைக் கொன்றது என்றும் அவர் பேசியிருந்தார். நீதிமன்றக் கண்காணிப்பில் இருக்கும் சிபிஐ விசாரணையைத் திசை திருப்பவே அமைச்சர் இப்படிப் பேசியுள்ளார் என்று ஆர்.எஸ். பாரதி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அமைச்சர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் திமுக முடிவு செய்தது.

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க திட்டம்! தவெக வியூகம் Explained

திமுக நீதிமன்றத்தில் கேட்டுள்ள கோரிக்கைகள்:

  • பேச தடை: முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்த வழக்கு குறித்துப் பொதுவெளியில் பேச தடை விதிக்க வேண்டும்.
  • பாதுகாப்பு நெறிமுறைகள்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு நலத்திட்டங்களை வழங்கும் போது, சாட்சிகள் பாதிக்கப்படாத வகையில் உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலுடனும், சிபிஐ-க்குத் தெரிவித்துமே வழங்க வேண்டும்.
  • சிபிஐ நடவடிக்கை: கடந்த ஜூலை 2-ஆம் தேதி சாட்சிகளைக் கலைக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐ நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் அஹ்சானுதீன் அமானுல்லா மற்றும் ஷீல் நகு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை அவசர வழக்காக இன்று விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. திமுக செயலாளர் ஆர்.எஸ். பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹுஜேஃபா அகமதி கூறுகையில், கரூர் கூட்டநெரிசல் வழக்கை இந்த நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதுடன் அதைக் கண்காணிக்க ஒரு குழுவையும் அமைத்துள்ளது.

ஆனால், விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே சாட்சிகளை மாற்ற முயற்சிகள் நடக்கின்றன. தற்போதைய ஆட்சியில் அமைச்சர்களாக இருக்கும் சிலர் (குற்றம் சாட்டப்பட்டவர்கள்), சாட்சிகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்ற தீவிரமாக முயல்கிறார்கள் என்று குற்றம்சாட்டினர்.

திமுகவின் முக்கியக் குற்றச்சாட்டுகள்:

மேலும் அரசு நலத்திட்டங்கள் வழங்க தடை இல்லை, ஆனால்.. ஜூலை 10-ஆம் தேதி முதல்வர் விஜய் கரூர் சென்று, உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை, நிதி உதவி உள்ளிட்ட பலன்களை வழங்க உள்ளார். அரசு உதவி வழங்குவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறியுள்ளது திமுக.

ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தான் இந்த சிபிஐ வழக்கின் முக்கிய சாட்சிகள் என்று சுட்டிக்காட்டியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களோ அல்லது ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களோ இவர்களை நேரடியாகச் சந்திப்பது விசாரணையின் நேர்மையைப் பாதிக்கும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

இதைக் கேட்ட நீதிபதி அமானுல்லா இதில் நாம் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும்? என்று முதலில் கேட்டார். இதனைத் தொடர்ந்து இறுதியாக இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிமன்றம் சம்மதித்தது.அமைச்சருக்கு ஆதவ் எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

குறிப்பாக வழக்கு விசாரணையில் இருக்கும்போது, அது குறித்து ஒரு அமைச்சர் பேசும் கருத்துக்கள் சாட்சிகளைத் திசைதிருப்பவோ, பொதுமக்களிடையே ஒரு சார்பான எண்ணத்தை உருவாக்கவோ அல்லது நீதிமன்றத்தின் நடுநிலைமையைச் சந்தேகிக்க வைக்கவோ முயன்றால், அவர் மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டம், 1971-ன் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று வழக்கறிஞர் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Spread the love