சென்னை: சென்னையில் இன்று (மே 13) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. அதேவேளையில், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.
அந்நியச் செலாவணிக் கையிருப்பைப் பாதுகாக்க உதவும் வகையில், ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்க்குமாறு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவுறுத்தினார்.
இந்நிலையில் தங்கம், வெள்ளியின் வெளிநாட்டு கொள்முதலைக் கட்டுப்படுத்தவும் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் எடுக்கப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 6-லிருந்து 15% ஆக உயர்த்தியது. இதன் எதிரொலியாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
தங்கம் விலை மீண்டும் உயர்வு: மத்திய அரசின் அறிவிப்பு எதிரொலியாக நேற்று (மே 13) தங்கம் விலை ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்தது. நேற்று காலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.1070 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,400-க்கும், பவுனுக்கு ரூ.8,560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,23,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், நேற்று மாலை தங்கம் விலை சரிவைக் கண்டது. 22 காரட் தங்கம் விலை ரூ.400 குறைந்து ஒரு கிராம் ரூ.15,000-க்கும், பவுனுக்கு ரூ.3,200 குறைந்து ஒரு பவுன் ரூ.1,20,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (மே14) காலை மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,050-க்கும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,20,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,570-க்கும் பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,00,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.315-க்கும், ஒரு கிலோ ரூ.3,15,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடத்தல் அபாயம்: இந்த வரி உயர்வு, உலகின் இரண்டாவது மிகப் பெரிய தங்கம், வெள்ளி நுகர்வோரான இந்தியாவில் அவற்றின் தேவையை குறைக்கக்கூடும். வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க உதவக்கூடும்.
கடந்த 2024-ம் ஆண்டு மத்தியில் இந்தியா வரிகளை குறைத்த பிறகு தங்கக் கடத்தல் தணிந்திருந்த நிலையில், தற்போதைய வரி உயர்வு மீண்டும் தங்கக் கடத்தலை தூண்டக்கூடும் என தொழில் துறையினர் எச்சரித்துள்ளனர்.

More Stories
தங்கம் விலை ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்தை கடந்து அதிர்ச்சி!படம்: சென்னை: தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தி உள்ளது மத்திய அரசு. இதனால், ஆபரணத் தங்கம் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.1,840 உயர்வு
இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு தினமும் ரூ.1,700 கோடி இழப்பு